ஆ வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | ஆகாசம் | வானம் |
2 | ஆகாயம் | வானம் |
3 | ஆகாரம் | (திட அல்லது திரவ)உணவு |
4 | ஆக்கிரமித்தல் | கையகப்படுத்தல் |
5 | ஆங்காரம் | அகங்காரம் |
6 | ஆசனம் | இருக்கை |
7 | ஆசாரம் | ஒழுக்கம் |
8 | ஆசீர்வாதம் | வாழ்த்து |
9 | ஆசை | அவா |
10 | ஆச்சரியம் | வியப்பு |
11 | ஆஜர் | வருகை |
12 | ஆடம்பரம் | பகட்டு |
13 | ஆடி | ஒரு தமிழ் மாதத்தின் பெயர் |
14 | ஆட்சேபணை | தடை |
15 | ஆதங்கம் | மனக்குறை |
16 | ஆதாரம் | சான்று |
17 | ஆதிக்கம் | வல்லாண்மை |
18 | ஆதிபத்தியம் | அதிகாரத் தலைமை |
19 | ஆனந்தமூலி | கஞ்சா. |
20 | ஆனந்தம் | மகிழ்ச்சி |
21 | ஆனி | தமிழ் வருடத்தில் மூன்றாவது மாதம் |
22 | ஆன்மா | உயிர் |
23 | ஆபத்து | தீங்கு, கேடு, வில்லங்கம், இடர் |
24 | ஆபரணம் | அணிகலன் |
25 | ஆபாசம் | கொச்சை |
26 | ஆமோதித்தல் | வழிமொழிதல் |
27 | ஆயுதம் | போர் கருவி |
28 | ஆயுள் | வாழ்நாள் |
29 | ஆரம்பம் | தொடக்கம் |
30 | ஆராதனை | வழிபாடு |
31 | ஆரோக்கியம் | நலம்(உடல்நலம்) |
32 | ஆலயம் | கோயில் |
33 | ஆலோசனை | கலந்தாய்வு |
34 | ஆல்பம் | செருகேடு |
35 | ஆவணி | ஐந்தாம் தமிழ் மாதத்தின் பெயர் |
36 | ஆவேசம் | படபடப்பு |
37 | ஆஸ்தி | செல்வம் |