கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1கங்கணம்

உறுதி (பூணல்)
கடகம்

2கசெட்

அரசிதழ்

3கஜானா

கருவூலம்

4கடாக்ஷ்ம்

கருணை, அருள்

5கடிகாரம்

கன்னல், மணிக்கூடு

6கடிதம்

மடல்

7கடுதாசி ,கடதாசி

தாள்காகிதம்

8கட்சி

அணி

9கண்டம்

பெருநிலம்

10கண்ணியம்

பெருந்தன்மை

11கதம்பம்

கலவை

12கதி

போக்கு, புகலிடம்

13கதிரை

நாற்காலி, இருக்கை

14கனிஷ்ட

இளைய

15கபாலம்

மண்டையோடு

16கப்பம்

அரசிறை
வன்பறி

17கம்பீரம்

மிடுக்கு

18கம்மி

குறைவு

19கரகோஷம்

கையொலி

20கரம்

கை

21கருணை

அருள்

22கருமம்

செயல்
வினை

23கர்ச்சனை

உறுமல்

24கர்ணபரம்பரை

செவிவழி

25கர்ணம்

காது
கணக்கன்

26கர்ப்பக் கிருஹம்

கருவறை

27கர்ப்பம்

சூல்

28கர்வம்

செருக்கு

29கறார் விலை

ஒரே விலை

30கற்பக்கிரகம்

கருவுண்ணாழி

31கலசம்

குடம்
பால்முட்டி

32கலர் பென்சில்

வண்ணக்கோல்

33கலாசாலை

பல்கலைக்கழகம்

34கலாச்சாரம்

பண்பாடு

35கலாநிதி

முனைவர்

36கல்யாணம்

திருமணம்

37கவர்னர்

ஆளுநர்

38கவி

பா
கவிதை

39கவிஞன்

பாவலன்

40கவிதை

பா

41கவித்துவம்

பாத்திறம்

42கவுரவம்

பெருமை, மேன்மை

43கஷ்டம்

அல்லல்
சங்கடம்

44கஸ்டம்

துன்பம்
கடுமை

45கஸ்தூரி

காசறை

46காங்கரிட்

திண்காரை

47கானம்

இசைப்பாடல்

48காராக்கிரகம்

சிறைச்சாலை

49காரியதரிசி

செயலர், செயலாளர்

50காரியம்

செயல்

51காரியாலயம்

அலுவலகம், செயலகம்

52காருண்யம்

பரிவு

53கார்

மகிழுந்து
சிற்றூந்து

54கார்த்திகை

நளி ( 29 ) ( 17 Nov)

55காலாவதி

கெடுமுடிவு

56காலி

நிரப்பப்படாமல் உள்ள நிலை

57காலிப்பயல்

போக்கிரி

58கிஞ்சித்தும்

சிறிதும், கொஞ்சமும்

59கிரகம்

கோள்

60கிரயம்

விலை

61கிராமம்

சிற்றூர்

62கிரிகை

வழிபாடு

63கிரீடம்

முடி

64கிருகப் பிரவேசம்

புதுமனை புகு விழா; புதுமனை புகுதல்

65கிருகம்

மனை

66கிருஷ்ணன்

கண்ணன்

67கிருஹப் பிரவேசம்

புதுமனை புகுவிழா

68கிஸ்தி

வரி

69கீதம்

பாடல், பண், கானம்

70கீர்த்தி

புகழ்

71குசலம்

நலம்

72குதூகலம்

மகிழ்ச்சி, எக்களிப்பு

73கும்பம்

குடம்
10000000000

74கும்பாபிசேகம்

குடமுழுக்கு

75கும்பாபிஷேகம்

குடமுழுக்கு

76குரு

ஆசிரியர்

77குஷ்ட ரோகம்

தொழுநோய்

78குஷ்டம்

தொழுநோய்

79குஸ்தி

மற்போர்

80கேசம்

முடி

81கேந்திரம்

மையம்

82கேப்சூல்

பொதியுறை

83கேலி

பகிடி
ஏகடியம்
எள்ளல்

84கேவலம்

இழிவு(னது)

85கேஷியர்

காசாளர்

86கேஸ் சிலிண்டர்

ஆவி உருளை

87கைங்கரியம்

திருப்பணி

88கைதி

சிறையாளி

89கைலாசம்

வெள்ளிமலை

90கோத்திரம்

குடி

91கோபம்

சினம்

92கோப்பை

கிண்ணம்

93கோரமாட்டோம்

கேட்கமாட்டோம்

94கோஷம்

உரத்த குரலில் அனைவரும் சேர்ந்து எழுப்புதல்
முழக்கம்
பேரொலி

95கோஷ்டி

குழாம், குழு

96க்ஷேமம்

நலம்