கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1சக

உடன்

2சகஜம்

இயல்பு, வழக்கம்

3சகலமும்

எல்லாமும்

4சகலம்

எல்லாம்

5சகவாசம்

பழக்கம், நட்பு

6சகா

தோழர்

7சகாயம்

உதவி.

8சகிதம்

துணை
உடன்

9சகிப்பு

பொறை

10சகோதரன்

உடன் பிறந்தவன்

11சகோதரி

உடன்பிறந்தாள்

12சக்கரம்

உருளை
சில்லு
சுழல் வட்டு

13சக்கரவர்த்தி

பேரரசன்

14சக்தி

ஆற்றல்
வலிமை

15சங்கடம்

தயக்க நிலை
கூச்சம் இக்கட்டு

16சங்கமேஸ்வரர்

கூடுதுறையார்

17சங்கம்

கழகம்

18சங்கஷ்டம் ,சங்கட்டம்

துன்பம்

19சங்கீதம்

இசை

20சங்கோசம்

வெட்கம், கூச்சம்

21சச்சிதானந்தம்

மெய்யறிவின்பம்

22சஞ்சலம்

துயரம், கலக்கம்

23சஞ்சாரம்

நடமாட்டம்

24சட்டை

அங்கராத்து, மேலாடை, மெய்ப்பை

25சதவீதம்

நூற்றுக்கூறு, விழுக்காடு

26சதா

எப்போதும்.

27சதுர்

நான்கு

28சத்தியம்

வாய்மை; உண்மை

29சத்தியாக்கிரகம்

அறப்போராட்டம்

30சத்ரு

பகை, எதிரி

31சந்ததி

வழித்தோன்றல்

32சந்தர்ப்பம்

வாய்ப்பு

33சந்தா

கட்டணம்

34சந்தியாவந்தனம்

வேளை வழிபாடு

35சந்திரன்

மதி,நிலவு

36சந்தேகம்

அய்யம், ஐயம்

37சந்தை

அங்காடி

38சந்தோசம்

மகிழ்ச்சி

39சந்தோஷம்

மகிழ்ச்சி

40சனம் ,ஜனம்

மக்கள்

41சனாதன

தொன்மை

42சனி

(கிழமைகளில்) காரி

43சன்மார்க்கம்

நன்னெறி

44சபதம்

வஞ்சினம், சூளுரை(சூள்)

45சபை

அவை

46சப்தம்

ஒலி

47சப்பாத்து

காலணி

48சமபந்தம்

தொடர்பு

49சமரசம்

உடன்பாடு

50சமஷ்டி

இணைப்பாட்சி

51சமஸ்கிருதம்

செங்கிருதம், வடமொழி

52சமாச்சாரம்

சேதி

53சமாதானம்

அமைதி

54சமாளி

ஈடுகொடு
துணிந்து செயல்படு.

55சமீபம்

அண்மை
அருகு

56சமுதாயம்

குமுகாயம்

57சமுத்திரம்

பெருங்கடல்

58சமூகம்

குமுகாயம்

59சமூகம்தந்து

வருகைதந்து

60சம்பந்தம்

தொடர்பு

61சம்பளம்

கூலி, ஊழியம்

62சம்பவம்

நிகழ்ச்சி

63சம்பாஷணை

உரையாடல்

64சம்பிரதாயம்

தொன்மரபு
நடைமுறை (வழக்கமான சொல்.)

65சம்மதம்

இசைவு

66சம்மேளனம்

கூட்டமைப்பு

67சம்ரட்சணை

காப்பாற்றுதல்

68சரகம்

எல்லை
(சரகம் என்ற வார்த்தை வனச்"சரகம்" என்பதில் வருவதுண்டு)

69சரசுவதி

கலைமகள்

70சரணம்

முடிப்பு, அடைக்கலம்

71சரணாகதி

அடிபணிவு, அடைக்கலம்

72சரண்

அடைக்கலம்

73சரஸ்வதி

கலைமகள்

74சரிகை

ஒழுக்கம்

75சரித்திரம்

வரலாறு

76சரீரம்

உடல்
உடம்பு

77சர்க்கார்

அரசாங்கம்

78சர்வ

எல்லாம்.

79சர்வஜனவாக்கெடுப்பு

பொதுவாக்கெடுப்பு

80சர்வதேச

அனைத்துலக

81சர்வம்

எல்லாம்

82சலதோஷம்

தடுமம்

83சலூன்

முடிதிருத்தகம்
சிகை அழககம்
சிகையலங்கரகம்

84சவம்

பிணம்

85சவரம்

மழிப்பு

86சவால்

அறைகூவல்.

87சவ்கரியம்

இடையூறு இல்லாமை

88சஷ்டி

ஆறாத்திதி
ஆறாம் வேற்றுமை. (பி.வி. 6)
அமாவாசைக்குப் பின் ஆறாவது நாள்

89சாகசம்

துணிச்சல்
வீர தீரச் செயல்.

90சாட்சி

சான்று

91சாதகம்

ஆதரவு

92சாதம்

சோறு

93சாதாரண

இயல்பான, எளிதான

94சாதாரணமாய்

இயல்பாய்,எளிதாய்

95சாதாரணம்

எளிது

96சாத்தியமான

இயலக்கூடிய

97சாந்தம்

அடக்கம்

98சாந்தி

திருமுற்றம்
அமைதி

99சாபம்

கெடுமொழி

100சாமான்

பண்டம்