ச வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | சக | உடன் |
2 | சகஜம் | இயல்பு, வழக்கம் |
3 | சகலமும் | எல்லாமும் |
4 | சகலம் | எல்லாம் |
5 | சகவாசம் | பழக்கம், நட்பு |
6 | சகா | தோழர் |
7 | சகாயம் | உதவி. |
8 | சகிதம் | துணை |
9 | சகிப்பு | பொறை |
10 | சகோதரன் | உடன் பிறந்தவன் |
11 | சகோதரி | உடன்பிறந்தாள் |
12 | சக்கரம் | உருளை |
13 | சக்கரவர்த்தி | பேரரசன் |
14 | சக்தி | ஆற்றல் |
15 | சங்கடம் | தயக்க நிலை |
16 | சங்கமேஸ்வரர் | கூடுதுறையார் |
17 | சங்கம் | கழகம் |
18 | சங்கஷ்டம் ,சங்கட்டம் | துன்பம் |
19 | சங்கீதம் | இசை |
20 | சங்கோசம் | வெட்கம், கூச்சம் |
21 | சச்சிதானந்தம் | மெய்யறிவின்பம் |
22 | சஞ்சலம் | துயரம், கலக்கம் |
23 | சஞ்சாரம் | நடமாட்டம் |
24 | சட்டை | அங்கராத்து, மேலாடை, மெய்ப்பை |
25 | சதவீதம் | நூற்றுக்கூறு, விழுக்காடு |
26 | சதா | எப்போதும். |
27 | சதுர் | நான்கு |
28 | சத்தியம் | வாய்மை; உண்மை |
29 | சத்தியாக்கிரகம் | அறப்போராட்டம் |
30 | சத்ரு | பகை, எதிரி |
31 | சந்ததி | வழித்தோன்றல் |
32 | சந்தர்ப்பம் | வாய்ப்பு |
33 | சந்தா | கட்டணம் |
34 | சந்தியாவந்தனம் | வேளை வழிபாடு |
35 | சந்திரன் | மதி,நிலவு |
36 | சந்தேகம் | அய்யம், ஐயம் |
37 | சந்தை | அங்காடி |
38 | சந்தோசம் | மகிழ்ச்சி |
39 | சந்தோஷம் | மகிழ்ச்சி |
40 | சனம் ,ஜனம் | மக்கள் |
41 | சனாதன | தொன்மை |
42 | சனி | (கிழமைகளில்) காரி |
43 | சன்மார்க்கம் | நன்னெறி |
44 | சபதம் | வஞ்சினம், சூளுரை(சூள்) |
45 | சபை | அவை |
46 | சப்தம் | ஒலி |
47 | சப்பாத்து | காலணி |
48 | சமபந்தம் | தொடர்பு |
49 | சமரசம் | உடன்பாடு |
50 | சமஷ்டி | இணைப்பாட்சி |
51 | சமஸ்கிருதம் | செங்கிருதம், வடமொழி |
52 | சமாச்சாரம் | சேதி |
53 | சமாதானம் | அமைதி |
54 | சமாளி | ஈடுகொடு |
55 | சமீபம் | அண்மை |
56 | சமுதாயம் | குமுகாயம் |
57 | சமுத்திரம் | பெருங்கடல் |
58 | சமூகம் | குமுகாயம் |
59 | சமூகம்தந்து | வருகைதந்து |
60 | சம்பந்தம் | தொடர்பு |
61 | சம்பளம் | கூலி, ஊழியம் |
62 | சம்பவம் | நிகழ்ச்சி |
63 | சம்பாஷணை | உரையாடல் |
64 | சம்பிரதாயம் | தொன்மரபு |
65 | சம்மதம் | இசைவு |
66 | சம்மேளனம் | கூட்டமைப்பு |
67 | சம்ரட்சணை | காப்பாற்றுதல் |
68 | சரகம் | எல்லை |
69 | சரசுவதி | கலைமகள் |
70 | சரணம் | முடிப்பு, அடைக்கலம் |
71 | சரணாகதி | அடிபணிவு, அடைக்கலம் |
72 | சரண் | அடைக்கலம் |
73 | சரஸ்வதி | கலைமகள் |
74 | சரிகை | ஒழுக்கம் |
75 | சரித்திரம் | வரலாறு |
76 | சரீரம் | உடல் |
77 | சர்க்கார் | அரசாங்கம் |
78 | சர்வ | எல்லாம். |
79 | சர்வஜனவாக்கெடுப்பு | பொதுவாக்கெடுப்பு |
80 | சர்வதேச | அனைத்துலக |
81 | சர்வம் | எல்லாம் |
82 | சலதோஷம் | தடுமம் |
83 | சலூன் | முடிதிருத்தகம் |
84 | சவம் | பிணம் |
85 | சவரம் | மழிப்பு |
86 | சவால் | அறைகூவல். |
87 | சவ்கரியம் | இடையூறு இல்லாமை |
88 | சஷ்டி | ஆறாத்திதி |
89 | சாகசம் | துணிச்சல் |
90 | சாட்சி | சான்று |
91 | சாதகம் | ஆதரவு |
92 | சாதம் | சோறு |
93 | சாதாரண | இயல்பான, எளிதான |
94 | சாதாரணமாய் | இயல்பாய்,எளிதாய் |
95 | சாதாரணம் | எளிது |
96 | சாத்தியமான | இயலக்கூடிய |
97 | சாந்தம் | அடக்கம் |
98 | சாந்தி | திருமுற்றம் |
99 | சாபம் | கெடுமொழி |
100 | சாமான் | பண்டம் |