தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. நகல்

படி

2. நடராஜன்

ஆடலரசன், ஆடல் வல்லான்

3. நடு ஜாமம்

நள்ளிரவு

4. நட்சத்திரம்

விண்மீன்

5. நட்டம்

இழப்பு

6. நதி

ஆறு

7. நத்தார்

திருப்பிறப்பு

8. நமஸ்காரம்,சலாம்

வணக்கம்

9. நர்சரி

மழலைப்பள்ளி

10. நளினம்

நயம்

11. நவம்

ஒன்பது

12. நவரசம்

தொண்சுவை

13. நவீன

புதிய

14. நவீனத்துவம்

நவீன மயமாதலின் முழுமைக்ட்டத்தில் உருவான ஒரு கலை மற்றும் சிந்தனைப்போக்கு. நவீனமயமாதலின் எதிர்ம்றை இயல்புகளை அதிககமாகக் கவனிப்பது இது.
பழைய நிலையிலிருந்து மறுபடல்
நவீன மயமாக்கல்
புதிதாக்கள்

15. நவீனம்

புதுமை; புதினம்

16. நஷ்டம், நட்டம்

இழப்பு

17. நாகரிகம்

பண்பாடு

18. நாசம்

அழிவு

19. நாசி

மூக்கு

20. நாடா

இழை

21. நாதஸ்வரம்

நாதசுரம்

22. நாத்திகம்

நம்பாமதம்

23. நாமம்

பெயர்

24. நாயகன்

தலைவன்

25. நாயகி

தலைவி

26. நாஷ்டா

சிற்றுண்டி

27. நிசப்தம்

அமைதி

28. நிச்சயம்

உறுதி

29. நித்திரை

உறக்கம்

30. நித்யம்

முடிவில்லாத

31. நிந்தனை

இகழ்ச்சி

32. நிபந்தனை

முன்னீடு

33. நிபுணர்

வல்லுநர்

34. நிமிஷம், நிமிடம்

மணித்துளி

35. நிம்மதி

மனஅமைதி

36. நியதி

செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4)
ஒழுக்கவிதி. அருநியதி நாடிய சன்னியாசப்பெருந் தவத்த னாயினான் (இரகு. இரகுகதி. 18)
ஊழ். (குறள், அதி. 38, அவ.)
முறைமை
வறையறை. இன்னவிடத்து என்னும் நியதியின்றி (நன். 393, மயிலை.).
நியதிதத்துவம்.நியதி முன்ன ரியலிருவினை (ஞான. 1)
எப்பொழுதும். நியதி உழக்கு நெய் முட்டாமல் எரிவதாக (T. A. S. i, 237).

37. நியமனம்

அமர்த்தம்

38. நியாயம்

நேர்மை

39. நியாயஸ்தலம்

வழக்கு மன்றம்

40. நிரந்தரம்

நிலைப்பு

41. நிரபராதி

குற்றமற்றவர்

42. நிராகரி

புறக்கணி

43. நிருபர்

செய்தியாளர்

44. நிர்ணயம்

முடிவு

45. நிர்ப்பந்தம்

வலுக்கட்டாயம்

46. நிர்மூலம்

வேரறப்பு
முழுஅழிப்பு
அழிவு

47. நிர்வாகம்

செயலாண்மை

48. நீதி

நடுவுநிலைமை, நன்னெறி

49. நீதிபதி

நடுவர்

50. நேசம்

நட்பு, அன்பு

51. நேரம்

ஓரை, நாழி