தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1. பகவான்

கடவுள்

2. பகிரங்கம்

வெளிப்படை

3. பகிஷ்கரிப்பு

புறக்கணிப்பு

4. பக்குடுக்கச் சாயனா

பல்குடுக்கை நன்கணியார்

5. பக்குவம்

முதிர்ச்சி

6. பக்தன்

அடியான்

7. பங்குனி

மீனம் ( 30 ) ( 15 marc)

8. பசங்கள்

பிள்ளைகள்

9. பச்சாத்தாபம்

இரக்கம்

10. பஜனை

கூட்டுப்பாடல் வழிபாடு

11. பஜார்

கடைவீதி

12. பஞ்சநதீஸ்வரர்

ஐயாற்றார்

13. பஞ்சபூதங்கள்

ஐம்பூதம்

14. பஞ்சாங்கம்

ஐந்திறம்

15. பஞ்சாமிர்தம்

ஐந்தமுது

16. பஞ்சாயத்து

ஊராட்சி

17. பட்சணம்

சிற்றுண்டி,

18. பட்ஷி, பக்ஷி, பட்சி

பறவை

19. பண்டிகை

திருநாள்
பெருநாள்

20. பண்டிதர்

புலவர்
அறிஞர்

21. பதிஞானம்

இறையுணர்வு

22. பதிவிரதை

கற்புடையாள்

23. பத்தினி

கற்பணங்கு

24. பத்திரிகை

ஏடு
செய்தித்தாள்
இதழ்

25. பத்திரிக்கை

இதழ், செய்தித்தாள்

26. பந்தம்

பிணைப்பு
உறவு
நட்பு

27. பந்துக்கள்

உறவினர்கள்

28. பந்தோபஸ்து

பாதுகாப்பு

29. பரம்பரை

தலைமுறை

30. பரஸ்பரம்

ஒருவர்க்கொருவர்

31. பராக்கிரமம்

பேராண்மை

32. பரிகாசம்

ஏளனம், நையாண்டி, நகையாடல், எள்ளல்

33. பரிகாரம்

விடிவு

34. பரிசீலனை

ஆய்வு

35. பரிச்சயம்

பழக்கம்,அறிமுகம்

36. பரிணாமம்

உருமலர்ச்சி

37. பரிதாபம்

இரக்கம்

38. பரிபாலனம்

ஆட்சி

39. பரிமாணம்

அளவீடு

40. பரீட்சை

தேர்வு
சோதனை

41. பரோபகாரம்

பிறர்க்கு உதவுதல்

42. பலம்

வலிமை

43. பலவந்தம்

கட்டாயம்

44. பலவீனம்

குறைபாடு

45. பலாத்காரம்

வன்முறை

46. பலி

காவு

47. பலித்தல்

கைசுடல்

48. பவஒளஷதீஸ்வரர்

பிறவிமருந்திறைவர்

49. பவனி

உலா

50. பவித்ரம்

தூய்மை

51. பவுண், பவுன்

பொன், தங்கம்

52. பவுர்ணமி

முழுமதி

53. பஸ்

பேரூந்து

54. பாக்கி

நிலுவை

55. பாக்கியம்

பேறு

56. பாசை, பாஷை

மொழி

57. பாஜகம்

உணவு

58. பாண்

வெதுப்பி

59. பாதகம்

தீமை

60. பாதம்

அடி

61. பாத்தியத்தை

உரிமை, சொந்தம்

62. பாரம்

சுமை

63. பாரம்பரியம்

தொன்மை மரபு
வழிவழியாக
தலைமுறை
பழம்பெருமை

64. பாராயணம்

see ஓதல்.

65. பாராளுமன்றம்

நாடாளுமன்றம்

66. பாலகன்

குழந்தை

67. பாலன்

சிறுவன்

68. பாலர்கள்

சிறுவர்கள்

69. பாலிகிளினிக்

பல்துறை மருந்தகம்

70. பால்யம்

இளமை

71. பாவம்

தீவினை

72. பிகு

இறுக்கம்
பிகுவு : தற்பெருமை.

73. பிங்களா

பிங்கலை

74. பிடிவிறாந்து

பிடியாணை

75. பிதாமகன்

தந்தை

76. பிதிர்

நீர்க்கடன்

77. பிதிர்தர்ப்பணம்

முடிக்கை

78. பிம்பம்

உரு

79. பியூட்டி பார்லர்

அழகு நிலையம், அழககம்

80. பிரகடனம்

அறிவிப்பு
சாற்றுகை

81. பிரகதீஸ்வரர்

பெருவுடையார்

82. பிரகாசம்

ஒளி

83. பிரகாரம்

திருச்சுற்று

84. பிரக்கியாதி

புகழ்

85. பிரசவம்

மகப்பேறு

86. பிரசாதம்

திருவமுது, திருப்பொருள்

87. பிரசாரம்

பரப்புரை

88. பிரசித்தி

புகழ்

89. பிரசுரம்

பதிப்பு

90. பிரச்சனை

சிக்கல்

91. பிரச்சாரம்

பரப்புரை

92. பிரச்சினை

சிக்கல்

93. பிரஜாவுரிமை

குடியுரிமை

94. பிரஜை

குடிமகன் / குடிமகள்

95. பிரதட்சணம்

வலம்வருதல்

96. பிரதட்சயம்

கண்கூடு,எதிர்

97. பிரதம

முதன்மை

98. பிரதமர்

தலைமை அமைச்சர்

99. பிரதஷ்ணம்

வலம்வரல்

100. பிரதானம்

முதன்மை
புகழ் முன்மை