ம வரிசை கிரந்தம்
# | கிரந்த சொற்கள் | இணையான தமிழ் சொற்கள் |
---|---|---|
1 | மகா ,மஹா | மா, பெரிய |
2 | மகாத்மா | பெருமகன் |
3 | மகான் | பெரியார் |
4 | மகிமை | பெருமை |
5 | மகிஷம் | எருமை(க்கடா) |
6 | மகுடம் | முடி |
7 | மஞ்சம் | கட்டில் |
8 | மஞ்சரி | மாலை |
9 | மண்டபம் | கூடம் |
10 | மதுரம் | இனிமை |
11 | மத்திய | மைய, நடுவண் |
12 | மத்தியானம் | நண்பகல் |
13 | மந்தாரம் | மப்பு |
14 | மந்திரம் | மறைமொழி |
15 | மந்திரி | அமைச்சர், அமைச்சன் |
16 | மந்திரிசபை | அமைச்சரவை |
17 | மனிதன் | மாந்தன் |
18 | மமதை | செருக்கு. |
19 | மயானம் | துயிலும்இல்லம் |
20 | மரணம் | இறப்பு |
21 | மரியாதை | மதிப்பு |
22 | மர்மம் | மசைபொருள் |
23 | மவுனம் | அமைதி |
24 | மஹோற்சவம் | திருவிழா |
25 | மாசி | கும்பம் (30 ) ( 13 feb) |
26 | மாஜி | முன்னாள் |
27 | மாதம் | திங்கள் |
28 | மாமிசம் | இறைச்சி, புலால்,தசை |
29 | மாமூல் | லஞ்சம். |
30 | மாய்மாலம் | பாசாங்கு |
31 | மார்கழி | சிலை ( 29 ) ( 16 Dec) |
32 | மார்க் | மதிப்பெண் |
33 | மார்க்கம் | நெறி, வழி |
34 | மார்ஜின் | வரந்தை |
35 | மிட்டாய் | இனிகம் |
36 | மிதவாதம் | மென்போக்கு |
37 | மிருகம் | விலங்கு |
38 | மிருது | மெது, மென்மை |
39 | முகஸ்துதி | முகமன் |
40 | முகாம் | பாசறை |
41 | முகூர்த்தம் | நல்வேளை |
42 | முக்கியம் | முதன்மை |
43 | முக்கியஸ்தர் | முன்னிலையாளர் |
44 | முக்தி | வீடு பேறு |
45 | முதற்பிரதி | முதற்படி |
46 | மூத்திரம் | சிறுநீர் |
47 | மூலதனம் | முதல் |
48 | மெஞ்ஞானம் | மெய்யியல் (முன்பே தத்துவம் மெய்யியல் என்று கூறப்பட்டுள்ளது சரியே. இதற்கு மெய்யறிவு பொருந்தும்) |
49 | மெட்ரிகுலேசன் | பதின்மப்பள்ளி, தகுதிநிலைப்பள்ளி |
50 | மேகம் | முகில் |
51 | மேதை | பேரறிஞர் |
52 | மேஷம் | |
53 | மைதானம் | அரங்கு |
54 | மையம் | வேள்வி |
55 | மோகம் | மையல், மயக்கம் |
56 | மோசம் | கேடு |