கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1வக்கிரம்

கோணல்

2வங்கி

காப்பகம்
வைப்பகம்

3வசந்தம்

தென்றல்

4வசனம்

உரையாடல்.

5வசீகரம்

கவர்ச்சி

6வனம்

காடு

7வனாந்தரம்

உட்காடு

8வமிசம்

குடி

9வம்சம்

மரபு

10வம்சாவழி

கொடிவழி

11வயது

அகவை

12வயோதிகம்

முதுமை

13வரதட்சணை

சீர்வரிசை

14வரப்பிரசாதம்

கொடை

15வரித்துறை

ஆயப்பகுதி

16வருடம் ,வருசம் ,வருஷம்

ஆண்டு

17வருத்தம்

துன்பம்

18வருஷம்

ஆண்டு

19வருஷம் ,வருடம்

ஆண்டு

20வர்க்கம்

வகுப்பு, இனம்

21வர்ணனை

புகழ்ந்துரை

22வர்த்தகநிலையம்

அங்காடி

23வர்த்தகம்

வாணிப(க)ம்

24வர்த்தகர்கள்

வணிகர்கள்

25வர்மம்

உட்பகை

26வஸ்து

பொருள்

27வாகனம்

வண்டி, ஊர்தி

28வாக்கியம்

சொற்றொடர்

29வாக்கு

வாய்மொழி

30வாக்குவாதம்

சொற்போர்

31வாசகர்

படிக்குநர்,படிப்போர்

32வாசனை

மணம்

33வாசம்

மணம்

34வாசி

படி

35வாடகை

குடிகூலி

36வாடிக்கை

இயல்பு
தொடர்ந்து நிலவுவது.

37வாட்டர் ஹீட்டர்

நீர் சூடூட்டி

38வாதம்

சொற்போர்
சொல்லாடல்
உடல் உறுப்புகளை முடமாக்கும் வாத நோய்

39வாத்தியம்

இசைக்கருவி

40வாந்தி

கக்கல்

41வாந்தி பேதி

கக்கல் கழிச்சல்

42வான்மீகநாதர்

பற்றிடங்கொண்டார்

43வாபஸ்

திரும்பப்பெறல்

44வாபஸ் வாங்கு

திரும்பப் பெறு.

45வாயு

வளி (காற்று)

46வாரம்

கிழமை

47வார்த்தை

சொல்

48வாலிபம்

இளமை

49வாலிபர்

இளைஞர், இளந்தாரி

50வாஸ்தவம்

உண்மை
மெய்மை

51விகிதம்

விழுக்காடு

52விக்கிரகம்

திருவுருவம்

53விசாலாட்சி

தடங்கண்ணி

54விசேட

சிறப்பு

55விசேஷம்

சிறப்பு

56விஜயம்

வருகை

57விஞ்ஞானம்

அறிவியல்

58விஞ்ஞானி

அறிவியலாளர்

59விதிகள்

நெறிகள்

60வித்தியாசம்

வேறுபாடு.

61வித்தியாரம்பம்

ஏடுதொடக்கல்

62வித்யாசம்

வேறுபாடு
மாறுபட்ட

63வித்யாலயம்

பள்ளி

64விநியோகம்

வழங்கல்

65விபத்து

துன்ப நிகழ்ச்சி

66விமர்சனம்

திறனாய்வு

67விமானம்

வானூர்தி

68வியாதி

நோய்

69வியாபாரி

வணிகர்

70விரக்தி

மனமுறிவு
மனஉடைவு
மன இடிவு

71விரதம்

நோன்பு

72விருட்சம்

மரம்

73விருது

பரிசு

74விருத்தி

பெருக்கம்

75விரோதம்

பகை

76விரோதி

பகைவன்

77விவாகம்

திருமணம்

78விவாகரத்து

மணமுறிவு

79விவாஹம்

திருமணம்

80விஷம்

நஞ்சு

81விஷயம்

விவரம். பொருள்

82விஷயம் ,விடயம் ,விசயம்

பொருள், செய்தி

83விஷ்ணு

திரு்மால்

84விஸ்தரிப்பு

விரிவாக்கம்

85விஸ்தீரணம்

பரப்பளவு; பரப்பு

86வீதி

தெரு, மறுகு, சாலை

87வீரம்

மறம்

88வெகுமானம்

அன்பளிப்பு

89வேகம்

விரைவு

90வேதம்

மறை

91வேதா

(வேதம்)கடவுள்
பிரமன்

92வேறுபாடுபிரயோஜனம்

பயன்

93வைகாசி

விடை (31) (15 May)

94வைத்தியசாலை

மருத்துவமணை

95வைத்தியம்

மருத்துவம்

96வைநாசிகம்

ஓர் யோகம்.

97வைவஸ்வதி

தென்திசை

98வ்ருஜநம்

தலை மயிர்