கருத்து தெரிவிக்க

உங்கள் கருத்துக்களை இங்கே கூறுங்கள்.

பயனர்கள் சொன்னவை!

விருபா,

வணக்கம்,

உங்கள் பணி பாராட்டிற்குரியது. மனதார வாழ்த்துகிறேன்.

http://www.xn--vkc6a6bybjo5gn.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html என்ற இணையமுகவரியில் சொற்பிறப்பு என்ற துணைத் தலைப்பில் /////////// காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் // என்பதாக உள்ளது. இதனை செக்கு czechoslovakia நாட்டு மொழியியலாளர் என்பதாக மாற்றுவது சிறப்பானதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணம். ஏனெனில் தமிழில் செக்கு என்ற ஒரு சொல் வழக்கில் உள்ளது.

மேலும் சொற்களை அகரவரிசையில் தருவதில் ஏதாவது சிக்கல் உள்ளதா, சில இடங்களில் அகர வரிசை மாறி வருவதாக உள்ளது. கவனிக்கவும்.

உங்கள் தமிழ்ச்சேவைக்கு எனது பாரட்டுக்கள்.

- விருபா து.குமரேசன்

கலைதாசன்,

ஐயா,

எழுத்துக்கள், கருத்துக்கள் என்று இருப்பது பிழை என நினக்கின்றேன். எழுத்துகள், கருத்துகள் என்பவை சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

நன்றி.

saravanan.t,

தங்கள் வலைத்தளத்தில் உள்ளவை மிகவும் பயனுடையவை. தங்களின் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

Ponsankar,

உங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துகள்.
மேலும், தூய தமிழ் பெயர்கள் தொகுத்து ஒரு பகுதி வைப்பின் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நன்றி!

Praga,

very needed work you had done it extreamely well carry on!!!!!!!!!!!

Bala,

நன்று. தங்கள் செய்கைக்கு என்னால் அன்ன உதவி செய்ய விரும்புகிறேன்

Greeny Raju,

Really super & great service for Tamil language conserve :)

9940410264 - Chennai (Raju - Greeny Raju)

Antoinemary,

i like general knowlegde

Pon karthik,

பல பயனுள்ள தகவல்களை உள்ளடக்கம் செய்தமைக்கு நன்றி.....

Mansur,

வணக்கம்

நீங்கள் கொடுத்துள்ளவை அனைத்தும் அருமை.
ஆனால் இன்னும் அதனுடைய அர்தங்களையும் கொடுத்திருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும்.....

முஹம்மது பாஹிம்,

அன்புடையீர்,

சில சொற்களிற் காணப்படும் பிழைகளைச் சற்றுக் கவனிக்க வேண்டுகிறேன். எடுத்துக் காட்டாக வானூர்தி என்பது வானுர்தி என்றுள்ளதைக் காண்கிறேன். அத்துடன் copyright - பதிப்புரிமை; patent - காப்புரிமை என்பதுதான் எனது புரிதல். இதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன்,

சிறப்பான தளம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… தொடர்கிறேன்...

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

http://dindiguldhanabalan.blogspot.com

கண்ணன்,

ஆஞ்ஞா என்ற தமிழ் சொல்லுக்கு அப்பா என்று அர்த்தம்.இச்சொல்லை இணைக்க வேண்டுகிறேன்.

kirijika,

உங்கள் ஆட்டங்கள் என்ற பகுதிகள் சில சொற்கள் எழுத்து பிழையாக உள்ளன. அதாவது சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளன. உங்களது முயற்சிக்கு எனது பராட்டுக்கள்.

செல்வா,

அகரமுதலியை உருவாக்கியதற்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்றதொரு இணையதளத்தை உருவாக்கவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அகரமுதலியின் தொடக்ககாலத்தில் இவ்வளவு தெளிவான விளக்கம் ஒவ்வொரு சொல்லுக்கும் தரப்படவில்லை. மற்றும் பல சமற்கிருத சொற்கள் தமிழ் சொற்களாகக் கூறப்பட்டிருந்தது. அவை இப்பொழுது களையப்பட்டுள்ளதாக எண்ணுகிறேன். அகரமுதலியை என் நண்பர்கள் மத்தியிலும் எடுத்துச் செல்கிறேன். இதை ஒரு முழுமையான சொற் களஞ்சியமாக மாற்ற என்னாலான சொற்களை பதிவிடுகிறேன். நான் காணும் புதிய, அல்லது தேவையான சொற்களை உங்களுக்கு அனுப்புகிறேன். அதன் இலக்கண வகை மற்றும் பயன்பாட்டை நீங்கள்தான் பதிவிடவேண்டும். இவ்வினயதளத்தை நடத்துவதில் எத்துனை இடரை நோக்கவேண்டுமேன்பதை நானறிவேன். தொடர்ந்து நடத்துங்கள். இதை விரிவாக்க வேண்டியது எங்கள் கடமை.

யோசிப்பவர்,

url எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது போல் இருந்தால் நன்றாயிருக்கும்!!

gnanaguru,

After seeing this site im very much happy...simply superb..any tamil people can see this site good standard...and i can find meanings for most of the words..i pray to the god to wish you people...in future sites like this will help peoples more and more..thank you

ஜே ரீபார்ன்,

வணக்கம் ,
தங்களது வலைத்தளம் கண்டேன் .
மிக அருமை .
மெல்லத் தமிழ் இனி ஓங்கும் .
கற்றது தமிழ் என்னும் பெயரில் 100 % தமிழ் கீழ் திட்டப்பணியொன்றினை மேற்கொண்டு வருகிறேன் .
நண்பர்கள் விரைவில் இணைந்து அனைத்து தமிழ் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு வழிகளில் ஈடுபடப்போகிறோம்.
தமிழ் படைப்பாளிகளை ஊக்குவித்தல் , அழியும் தருவாயிலுள்ள தொன்மையான புத்தகங்ககளை சீர்படுத்தி இணையப்படுத்துதல் , களப்பணி போன்றவை .
எனவே தாங்கள் எங்களுடன் உத்தியோகப்பூர்வ நண்பராய் இணைந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம் .
அன்புடன்
ஜே
( http://katradhu-tamil.blogspot.in/ )
( http://www.facebook.com/ultimatetamils )

ப. இராசமோகன்,

அன்புடையீர்,

ஒரு சொல்லை நீட்டி அல்லது குறுக்கி அதிலிருந்து குழந்தைகளுக்குப் பெயர்களைக் காலங்காலமாகத் தெரிவு செய்து வந்துள்ளோம்.

அதுபோலக் கேண்மை என்னும் சொல்லிலிருந்து கேண்மி என்னும் ஒரு சொல்லை ஆக்கி அதைப் பெண் குழந்தைகளுக்குப் பெயராகச் சூட்டலாம் என எண்ணுகிறேன்.

கேண்மை என்னுஞ்சொல் திருக்குறள் உட்படத் தமிழிலக்கிய நூல்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்லா நூல்களிலுமே நட்பு என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் பழமையான இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட பிறகு பிற்கால இலக்கியங்களில் பெரிதாக இடம்பெறவில்லை என்றே தோன்றுகிறது. உரைநடை நூல்கள் உருவான பிறகுங் கூட கதை கட்டுரை மற்றும் புதினங்களில் நூலாசிரியர்கள் இதனைப் பரவலாக எடுத்தாளவில்லை.
நட்புக்குப் பெருமை சேர்க்கும் கோப்பெருஞ் சோழர், பிசிராந்தையார் பற்றிக் குறிப்பிடுவோர் கூட அவ்விருவரும் ஒருவரை ஒருவர் நேரில் காணாமலேயே நண்பர்களாக இருந்தனர் என்று விளக்கம் தந்தாரேயன்றிக் கேண்மை கொண்டிருந்தனர் என்றோ, கேண்மக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தனர் என்றோ சொல்ல முன்வரவில்லை. நட்பு என்னுஞ சொல் கேண்மை என்னுஞ் சொல்லைவிட எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருப்பதால் அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.
கேண்மை என்னும் சொல்லைச் சற்று மாற்றி யாரேனும் எழுதியதாகவும் தெரியவில்லை. எடுத்துக் காட்டாக இரு நண்பர்களைக் குறிப்பிடும் பொழுது அவ்விருவரும் நட்புடன் பழகினர் என்பதை வேறு சொற்களில் அவ்விருவரும் கேண்மித்தனர் என்று குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அச்சொல்லில் எந்த மாற்றமும் செய்யாமல் அவ்விருவரும் கேண்மையுடன் பழகினர் என்று குறிப்பிடுவதிலேயே பலரும் உடன்பட்டிருந்துள்ளனர்.
உயர்ந்த பண்புகளைக் குறிக்கும் சொற்களில் சிறு மாற்றங்களைச் செய்து தமிழர்கள் தங்களுக்குப் பெயர்களாகச் சூட்டி மகிழ்ந்துள்ளனர். எடுத்துக் காட்டு: கவிதை-கவிதா, அமிழ்து-அமிழ்தினி, குயில்-குயிலி, குழல்-குழலி, யாழ்-யாழினி, செல்வம்-செல்வி-செல்வன், கண்-கண்ணன், நிலவு-நிலவன், கதிர்-கதிரவன், பொன்-பொன்னன், வேல்-வேலன்.
கேண்மை என்ற சொல்லில் உள்ள உயர்ந்த பொருளைக் கருத்தில் கொண்டு அதைக் குழந்தைகளுக்குப் பெயராகச் சூட்டி மகிழலாமே. கேண்மை என்ற சொல்லைச் சிறிதும் மாற்றாமல் பெயராக்க வேண்டும் என்றால் கேண்மையன், கேண்மையான், கேண்மையாள் என்றே கொள்ள வேண்டியதிருக்கும். இன்றுவரை யாரும் அவ்வாறு பெயர் கொண்டதாகத் தெரியவில்லை. பெயராகச் சூட்டப்படும் சொற்கள் அழைப்பதற்கு எளிதாகவும், இனிதாகவும், மற்ற பெயர்களின் பொருள் போல ஒலிக்காமலும் இருத்தல் வேண்டும்.
எனவே கேண்மை என்ற சொல்லிலிருந்து கேண்மி என்னும் சொல்லை எடுத்து அதைப் பெண் குழந்தைகளுக்குப் பெயராகச் சூட்டி மகிழலாம். அதன் மூலம் சிறைப்பட்டிருக்கும் கேண்மை என்னுஞ் சொல்லுக்குச் சிறகுகள் தரலாம். ஞாலக் கேண்மி, சங்கக் கேண்மி,.அன்புக் கேண்மி, செல்லக் கேண்மி என்று பல பெயர்களை இதன் மூலம் நம் குழந்தைகள் தாங்கி வளர்வதைக் கண்டு களிக்கலாம்.
வடமொழிச் சொற்களில் சினேகம் என்னுஞ் சொல்; சினேகன், சினேகா என்றும், மித்ர் என்னும் சொல; மித்ரன், மித்ரா என்றும் பெயராகச் சூட்டப்படுவது இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கது.

கேண்மி என்னுஞ்சொல் நட்புணர்வு கொண்டவள். அனைவரிடத்திலும் கேண்மையுடன் பழகக் கூடியவள் என்னும் பொருட்களைத் தரும்.

பள்ளித் தோழர்களுடன் கேண்மித்து விளையாடுங்கள் என்று குறிப்பிடும் பொழுது இச்சொல் வினைச்சொல்லாகவும் பொருள் படுகிறது.

கேண்மி என்னுஞ் சொல்லைத் தங்கள் அகரமுதலியில் இடம்பெறச் செய்வீர்களா?

அன்புடன்
ப. இராசமோகன்.

Kaliraj,

அருமையான வலைத்தலம். இதுநாள்வரை நான் இங்கு வராதமைக்காக வருந்துகிறேன். தமிழின் பெருமையை பறைசாற்றுகிறது இத்தலம். வாழ்த்துக்கள் உங்களுக்கு. தடைபடாது தொடரட்டும் தமிழ்ப்பணி.

இத்தலத்தில் என்னால்,பயனாலராக இணைய இயலவில்லை. மின்னஞ்சல் பிழை என்றே இயம்புகிறது தலம். எல்லாத் தகவல்களையும் சரியாகவே நுழைக்கிறேன், இருந்தும் பயனில்லை. தங்களால் உதவ இயலுமாயின், தயைகூர்ந்து அழைப்பு அனுப்புங்கள் ( Kaliraj2k6@gmail.com )

Ben J Zerubbabel,

A superb dictionary.It gives immense pleasure to see the real growth of our mother tongue through technology. How to type in Tamil in this page?

ராமானுஜம்,

காவணப்பத்தி - அலங்கரிக்கப் பட்ட வீட்டுக் கூரை

ref - http://www.dictionary.tamilcube.com/index.aspx

இந்த வார்த்தைக்கு உங்கள் பக்கத்தில் பொருள் இல்லை..இதை சமர்ப்பிக்கிறேன். சரிபார்த்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

Thamiramani,

அருமையான முயற்சி , எங்கள் துணை உங்களுக்கு உண்டு... வெற்றி வாழ்த்துக்கள்..

vijayadeepan,

மிக அருமையான தளம். தகவல்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.