உந்துவண்டி தொடர்புடைய சொற்கள் Automobile terms

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்

உந்துவண்டி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
Anti-lock braking system(A.B.S.) வழுக்கா நிறுத்தி (நிறுத்தமைப்பு) - சக்கரம் பூட்டிய நிலையை உணர்ந்து தன்னியக்கமாக விடுவிக்கும் நிறுத்தமைப்பு; இதனால் வழுக்கம் ஏற்படாமல் இருக்கும்
Camshaftநெம்புருள் தண்டு - விசைப்பொறியின் உள்ளெடுப்பு மற்றும் வெளியேற்ற ஓரதர்களை திறந்து மூடச் செய்யும் சுழலும் சாதனம்
Electronic fuel injectionElectronic fuel injection (EFI) SYSTEM மின்னணு (எரிபொருள்) உட்செலுத்தமைப்பு - இதன் உறுப்புகள் அ)எரிபொருள் வழங்கமைப்பு (fuel delivery system); ஆ)காற்றிழுவமைப்பு (air intake system); இ)மின்னணு கட்டுப்பாடமைப்பு (electronic control system)
Multipoint fuel injection(M.P.F.I.) பன்முனை உட்செலுத்தல் - இந்தச் உட்செலுத்தலில் ஒவ்வொரு கலனிலும் பல உட்செலுத்திகள் (injectors) அமைந்துள்ளன; இதனால் காற்றெரிபொருள் கலவை (air-fuel mixture) சமமாக இருக்கும்; முடுக்கம் மற்றும் ஒடுக்கம் விரையும்; எரிபொருள் சிக்கனம் கூடும்
power steeringவிசைத்திருப்பி - நீரியக்க (hydraulic) மற்றும் மின்னியக்க திருப்பான் அமைப்பு; இது திரும்பும் சிரமம் குறைவாக உள்ளது
pressure valveஅழுத்தவோரதர்
rack and pinion steeringஇத்திருப்பி அமைப்பில், பற்சிலி (rack) சக்கரங்களை இணைக்கும் அச்சாணியில் பொறிக்கப்பட்டுள்ளன. பல்லோடி திருப்பித்தண்டில் (steering shaft) அமைந்துள்ளது. பல்லோடியும்பற்சிலியும் சக்கரத்திருப்பி அமைப்பு திருப்பியக்கத்தை சக்கர அச்சாணியின் நேரியல் இயக்கமாக மாற்றுகிறது;
rear wheel driveபின்னியக்க, பின்னியக்கூர்தி -
recirculating ball steeringமறுசுழல்பந்து திருப்பி - இந்த திருப்பி அமைப்பில் ஒரு பிடிமுனைக்கரம் மூலம் சக்கரத்தின் அச்சாணியுடன் பிணைக்கப்படுகிறது; பிடிமுனைக்கரம் ஒரு ஆரைச்சிறைப் பற்சக்கரம் மற்றும் புழு பற்றகரம் மூலம் திருப்பித்தண்டுடன் (steering shaft) பிணைக்கிறது.
speed governorவேகக்கட்டுப்பாட்டுக்கருவி
steering rodதிருப்பிக் கரம்
steering shaftதிருப்பித் தண்டு
supercharged engineமிகையூட்டு விசைப்பொறி - வாரியக்கியில் (belt-drive) அமைந்த காற்றமுக்கி (air-compressor) மூலம் காற்று கலனுக்குள் (cylinder) அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி
throttle-bodyநெரிப்பகம்
Throttle-body fuel injection(TBI) நெரிப்பகச் உட்செலுத்தல் - ஒரு நெரிப்பகம் (throttle-body) மீது எரிபொருள் உட்செலுத்தப்படும் அமைப்பு; இதன் செல்யபாடு காற்றுக்கலக்கிக்கு (carburettor) நிகரானது, ஆனால் உட்செலுத்தல் (fuel injection) இதற்கு புறமாக அமைந்துள்ளது
throttle chamberநெரிப்பறை - உட்செலுத்தல் விசைப்பொறியில் (fuel injection engine) இது காற்றுப்பாய்வை (air-flow) கட்டுப்படுத்தும். இது மூடிய நிலையில் சீருந்து நிலையியங்கும் (idling); இதில் உள்ள மாற்றுவழியறை (bypass chamber) சிறிதளவு காற்றை விசைப்பொறிக்குள் விடுவிக்கிறது. மாற்றுவழியறைக்குள் காற்றுப்பாய்வை கட்டுப்படுத்தி விசைப்பொறியின் நிலையிருப்பு வேகத்தை மாற்றலாம்
throttle plateநெரிதகடு - நெரிப்பகத்தின் பெருமமான உறுப்பு; ஓட்டுநர் முடுக்கியை (accerator) அமுக்கினால், இந்தத் தகடு திறந்து காற்று விசைப்பொறிக்குள் நுழைய விடும்; சீர்வேகத்தின் (cruising speed) போது, இது நடுநிலையிலும், நிலையியக்கத்தின் (idling) போது இது முழுமையாக மூடியிருக்கும்
Throttle position sensor(TPS) நெரிநிலையுணரி - இந்த உணரி நெரிதகடில் (throttle plate) அமைந்திருக்கும்; இது மின்னணு உட்செலுத்தல் கணினியிடம் (EFI computer) நெரிதகடின் திறப்பு நிலையை தெரிவிக்கும்
turbocharged engineசுழலூட்டு விசைப்பொறி - வெளியேற்றகத்தில் அமைந்த சுழலி மூலம் காற்று கலனுக்குள் அழுத்தத்துடன் இறைக்கப்படும் விசைப்பொறி
turbochargerசுழலூட்டி

Last Updated: .