மரபுச் சொற்கள்

மரபுச்சொற்களின் திரட்டு

மரபுச் சொற்கள்
TermsMeaning / Definition
அரக்கப் பரக்கஅவசரம் அவசரமாக
அவசரமும் பதற்றமும்
அள்ளி இறைத்தல்அளவுக்கு மேல் செலவழித்தல்
அள்ளி விடுதல்ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அவசரக் குடுக்கைஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து செய்துவிடுபவன்
ஆறப் போடுதல்ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தி செய்தல்
ஆழம் பார்த்தல்ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்
எடுப்பார் கைப்பிள்ளைசுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர்
ஏட்டுச்சுரைக்காய்அனுபவமில்லாத நூல் படிப்பு
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
ஒரு கை பார்த்தல்மோதிப்பார்த்தல்
எதிர்கொள்ளுதல்
ஒற்றைக் காலில் நிற்றல்விடாப்பிடியாக நிற்றல்/பிடிவாதமாக இருத்தல்
ஓட்டை வாய்எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன்.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு
கங்கணம் கட்டுதல்ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதி எடுத்துக்
கொள்ளுதல்
கடுக்காய் கொடுத்தல்ஏமாற்றி தப்புதல்
கண்ணும் கருத்தும்முழுக் கவனத்துடன்
கம்பி நீட்டுதல்பிறரின் கவனத்திலிருந்து நழுவுதல்
கரி பூசுதல்அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல்
கரைத்துக் குடித்தல்ஒரு கவலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க படித்து அறிதல்
காது குத்துதல்சாமார்த்தியமாகப் பொய் சொல்லுதல்
கிணற்றுத் தவளைதான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்
கிள்ளுக்கீரைஅற்பமான ஒன்று.
மிகச்சுலபமாகச் சமாளித்து விடலாம் என்ற
நினைப்பு
குரங்குப் பிடிபிடிவாதம்/பற்றிக்கொண்டதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை
கை கழுவுதல்உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்
கை கூடுதல்ஒரு காரியம்/ செயல் நிறைவேறுதல்
கை கொடுத்தல்தக்க நேரத்தில் உதவி செய்தல்
கையும் களவுமாய்குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
செவி சாய்த்தல்உடன்படுதல்
இணங்குதல்
இசைதல்
தட்டிக் கழித்தல்ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
தலை எடுத்தல்வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல்
தலை குனிதல்அவமானம் அடைதல்

Last Updated: .