கிரந்தம் விரும்பேல்

தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ
Advertisement

வரிசை கிரந்தம்

#கிரந்த சொற்கள்இணையான தமிழ் சொற்கள்
1இ.சி.ஜி

நெஞ்சகத் துடிப்பு

2இடா

இறைகூட, ஒருபொறி
இடகலை

3இனாம்

நன்கொடை

4இயந்திரம்

பொறி

5இரகசியம்

குட்டு,மறைபொருள், கமுக்கம்

6இரசம்

சாறு

7இரசாயணம்

வேதியியல்

8இரதம்

தேர்

9இரத்தம்

குருதி

10இராகம்

பண்
இசைக் கலைஞர்தன் கற்பனைப்படி விரிவுபடுத்தக் கூடிய வகையில் இருக்கும் ஸ்வரங்களைக் குறிப்பிட்ட ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கொண்ட அமைப்பு

11இராச்சியம்

அரசு, நாடு

12இராஜினாமா

பணி விலகல்

13இராட்டினம்

(சக்கரமுள்ள) நூற்கும் கருவி
நூல் சுற்றும் கருவி
கிணற்றிலிருந்து நீர் இறைக்க உதவும் கப்பி
ஏறிச் சுழன்று விளையாட உதவும் சுழல் தேர்

14இராட்ஷசன்

அசுரன், நரகன்

15இராணுவம்

படை
சைனியம்

16இராத்திரி

இரவு, அல்

17இலகு

எளிது
எளிமை

18இலக்கம்

எண்

19இலட்சணம்

அழகு

20இலட்சியம்

இலக்கு
(வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில்)அடைய விரும்பும் நிலை,குறிக்கோள்

21இஷ்டம்

விருப்பம்

22இஸ்திரிப் பெட்டி

துணியழுத்தி