cover | புறங்கவிந்து மூடும்பொருள், மேலுறை, போர்வை, கவசம், மூடி, புத்தகத்தின் புற அட்டை, முன் அட்டை, அடி அட்டை, தாள் கூடு, அஞ்சல் உறை, மறைவிடம், ஒவக்கிடம், பாதுகாப்பிடம், மறைப்பு, பாதுகாப்பு, விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி, உருமாற்றம், பொய்க்காரணம், சாக்குபோக்கு, விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு, புதர்க் கும்பு, சதிக்கூட்டாள், உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி, வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி, மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை, (வி.) மேலிட்டுப்பரப்பு, போர்த்து, மேற்கவி, மூடு, பொதி, பூசு, சுற்றியிரு, சூழ்ந்திரு, புறங்கவிந்திரு, போர்த்திரு, புற ஆடையாயிரு, பரப்பு, பரவலாகச் சிதற வை, மறை, ஒளித்து வை, இடை நின்று தடு, இடை மறைப்பாயிரு, காப்பு வளமாயிரு, நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு, உள்ளடக்கு, ஊடுசெல், கடந்து செல், இடங்கொள், செயற்களமாகக் கொள், சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு, சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு, உணவு மேடை ஒழுங்கு செய், பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை, படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து, தலை மீது தொப்பியிடு, கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி, பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு. |
recover | வாட்போரில் வாளின் இயல்நிலை மீட்பு, (வினை) திரும்பப்பெறு, மீட்டுரிமை பெறு, இழந்த ஆற்றல் கைவரப்பெறு, சட்டமூலம் உரிமையாகப் பெறு, இழப்பீடாக அடை, உயிர் உடல்நல முதலியன மீளப்பெறு, முன்னிலைமை கை வரப்பெறு, தளர்ச்சிக்குப்பின் இயல்பான நிலை மீண்டும் எய்தப்பெறு, மீட்புப்பெறு, திரும்பச சென்றடையப்பெறு. |