govern | ஆளு, நேரடியாக ஆட்சி நடத்து, கோட்டையின் பொறுப்பாட்சி செய், நகரத்தின் பாதுகாப்பாட்சி ஏற்றுநடத்து, செயலாட்சி செய், செயல்முறைக்கான கோட்பாடுகளை வகுத்தியக்கு, ஆட்சிச் செயல்முறைகளை ஒழுங்கு படுத்து, வகைப்படுத்து, நெறிப்படுத்து, தூண்டு, ஆட்கொண்டியக்கு, வசமாகக்கொண்டு நடத்து, செல்வாக்கால் செயற்படுத்து, அடக்கியாளு, கட்டுப்படுத்து, செயலுறுதிசெய், ஆற்றலில் முதன்மை பெற்றிரு, சட்டக்கட்டுப்பாடுடையதாயிரு, உரிமையெல்லைக்குரியதாய் அமை, தொடர்புடையதாயிரு, அறுதி செய்ய உரியதாயமை, (இலக்.) தனிச்சாப்புடையதாகப் பெற்றிரு, அவாலி நில், தனிப்பட்ட வேற்றுமையை வேண்டிநில். |