knight | வீஜ்த் திருத்தகை, ஆண்டகை, கருணைமறவன், மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன், வீறார்ந்த பெருந்தகை, நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர், பண்பார்பெருந்தகை, படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர், வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர், (வர.) மாமன்ற வட்டப்பேராள், கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர், பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர், பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன், சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய், (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு. |