Word | Tamil Definition |
---|
lam | அடி, மொத்து, பிரம்பால் வன்மையாக அடி. |
lame | நொண்டியான, நொண்டுகிற, காலொடிந்த, காலற்ற, முடமான, கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய, வாத வகையில் குற்றமுள்ள, காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத, சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க, சீர் வகையில் அசைக்குறை வான, தட்டித்தடங்குகிற, (வினை) நொண்டியாக்கு, முடமாக்கு, குறைபடுத்து, ஏலாதாக்கு. |
clam | இடுக்கி, இறுக்கிப்பிடிக்கும் கருவி, எதிர் எதிராயுள்ள பாகங்கள் திருகாணியினால் இறுக்கப்படத்தக்க அழுத்தக்கருவி, (வி.) பற்று, இடுக்கு, இடைவைத்தழுத்து, (பே-வ.) வாய்மூடு, பேசாதிரு. |
flam | பொய்க்கதை, சூழ்ச்சிப்பொறி, ஏமாற்றுமுறை. |
slam | தடால் ஒலி, தடாற்கதவடைப்பு, சீட்டாட்ட முழுவரிசைக் கெலிப்பு, (வினை.) கதவைத் தடாலென அடை, கதவுவகையில் தடாலென மூடிக்கொள், தொப்பென்று வை, (பே-வ) அடி, மோது, புடை, தட்டு, எளிதில் வெற்றிகொள். |