Word | Tamil Definition |
---|
pall | பிணச்சீலை, பிணப்பேழை அல்லது கல்லறைமேல் விரிக்கப்படும் கருமை அல்லது வெள்ளை மென்பாட்டினாலான துணி, போப்பாண்டவர் அல்லது மாவட்டக்கிறித்தவ சமயத்தலைவர் அணியுங் கம்பளியுடை, மேலங்கி, மேலாடை. |
spall | சிம்பு, சிராய், (வினை.) சிம்புகளாக நொறுக்கு, சுரங்கவேலைவகையில் தாதுப்பொருள்களை வகைப்படுத்துவதற்காகச் சிம்புகளாக உடை. |
pallid | வெளுத்த, வெளிறிய. |
pallet | வேட்கோவர் மரத்துடுப்பு, ஓவியரின் வண்ணத்தட்டு, சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி, இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ். |
pallor | வெளிறிய நிறம், வெளிறிய தோற்றம். |