Word | Tamil Definition |
---|
potent | (செய்.) ஆற்றல்வாய்ந்த, மிகப்பெரிய, சிந்தனைவகையில் அறிவுக்குப் பொருத்தமான, கருத்துவகையில் மறுக்கமுடியாத, மருந்து முதலியன வகையில் ஆற்றல்மிக்க. |
impotent | செயலற்ற, வலுவற்ற, ஆற்றலற்ற, செயல் வகையற்ற, முதுமையுற்ற, தளர்ந்த, ஆண் தன்மையற்ற. |
prepotent | ஆற்றல் மிக்க, ஆற்றலில் விஞ்சிய, (உயி.) பொலிவூட்டுத் திறத்தில் மேம்பட்ட, மரபிற் பண்பூட்டும் திறத்தில் விஞ்சிய. |
potentate | ஆளுநர், வல்லுநர். |
potential | (மின.) மின்னுட்ட அளவு, மின் அழுத்த அளவு, நிகழக்கூடியது, மூல வாய்ப்புவளம், உள்ளார்ந்த ஆற்றல், வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம், (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல், (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த, வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள, பின்வள வாய்ப்புடைய, அகநிலைத் தகுதிவாய்ந்த, (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற, இருக்கத்தக்க, செயலுக்கு வரக்குடிய. |