prick | துளைக்கும் கூர்முனைப்பு குத்து, குத்துதல், முள்தைப்பு, ஊசித்தைப்பு, குத்தியதுளை, தையல்துளை, குத்துஞ்செயல், குத்தப்படும் அனுபவம், குத்தல் உணர்ச்சி, குத்திய காயம், புள்ளியிடம், கணம், கடிகார மணிக்குறி, அடையாளக்குறி, இயக்குங்குறி, முயல் அடித்தடம், (வினை.) மெல்லக்குத்து, கூர்முனையால் குத்து, குத்திச் சிறுதுளைசெய், குத்தி உள் நுழையச்செய், குத்தி இணை, குத்தி எடு, துளையில் புகுத்து, கூர்நோவுண்டாக்கு, குத்தும் உணர்ச்சி உண்டாக்கு, துனபம் விளைவி, குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து, பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி, குதிரை மீதிவர்ந்து செல், மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு, புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி, குத்திநடு, நாய்வகையில் காதை நிமிர்த்து, காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி, திடுமென விழிப்புற்றுக் கவனி, நிமிர்ந்து முனைத்து நிற்கவை, விறைத்துநில், தூண்டு, ஒட்டி ஒப்பனைசெய், சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு. |
prickle | துய்முள், பொடிமுள்கற்றை, செடிகளின் மேற்புறத்தில் தோன்றும் முள்போன்ற சுணை, சிறுமுள், முள்எலியின் கடுங்கூர்மையுடைய முள், (வினை.) முள்ளாற் குத்து, பொடிமுள்ளாற் குத்துவது போன்ற உணர்ச்சி உண்டாக்கு, முள்ளாற் குத்தப்படுவது போன்ற உணர்ச்சிபெறு. |