Word | Tamil Definition |
---|
pur | பூனைபோலக் கனை. |
pure | தூய, பரிசுத்தமான, கலப்பற்ற, நேர்வழிமரபான, கால்வழிக்கலப்பற்ற, துரைதீர்ந்த, பிறிதொன்றன் தொடர்பற்ற, கெடாத, வழுவாத, தீமை கலவாத, குற்றமற்ற, கரையற்ற, களங்கமில்லாத, மாசுமறுவற்ற, வாய்மை குன்றாத, பெண்மைநலங் கெடாத, ஒலிவகையில் முரனொலி கலப்பற்ற, இசைவகையில் முஜ்னோசைக்கலப்பற்ற, நேரிசையான, உயிர்வகையில் மற்றோர் உயிரொலியினைத் தொடர்ந்த, சொல்லடி வகையில் உயிரீறான, மெய் ஒலிவகையில்மற்றொரு மெய்யொலியுல்ன் இணையாத, இயல் நுல் வகையில் பயன்முறைத்துறை சாராத. |
purl | கோப்புத்தையல், குஞ்சம், ஒப்பனைப் பூவேலை அருகு, திருப்புத்தையல், (வினை.) முறுக்கிழைச் சரிகைக்கரைபின்னு, குஞ்சம் வைத்துத் தை, திருப்புத்தையல் போடு. |
purr | பூனை முதலியவற்றின் உறுமலொலி, மகிழ்ச்சிக்குறிப்பு, மனநிறைவு காட்டும் அடங்கிய குரல், (வினை.) உறுமு, மகிழ்ச்சிக் குறிப்புக்காட்டு. |
spur | குதிமுள், குதிரைவிலாவில் குத்தி ஊக்கும் தாற்றுமுள், தாற்று விளிம்புச் சுழல்வில்லை, தூண்டுகோல், தூண்டுவிசை, குதிமுள் வடிவப்பொருள், சேவலின் காலபுடைப்பு, போர்ச்சேவல் கால் செருகு செயற்கை எஃகுமுள், பக்கமலை, பனி மிதியடிக் கம்பிமுள், மரமேறும் மிதிமுள் கட்டை, கோட்டைப் புறமதிற் கோணம், (தாவ.) மலரின் இதழ் இழைத்தொங்கல், குறுங்கிளை, பூ அல்லது காய் தாங்கும் சிறுகிளை, புல்நோய் வகை, நோயுற்ற புல்விதை, (வினை.) குதிரையைக் குதிமுள்ளினாற் குத்து, தூண்டு, குதிமுள் பொருத்தியமை, முழுவிரைவுடன் குதிரை இவர்ந்து செல். |