sigh | நெட்டுயிர்ப்பு, பெருமூச்சொலி, ஏக்கம், ஆழ்துயர், மிக்க ஆறுதல் உணர்வு, (வினை.) நெடுமூச்செறி, பெருமூச்சுவிடு, பெருமூச்சோடு தெரிவி, பெருமூச்சுப் போன்று ஒலியெழுப்பு, ஏக்கங்கொள். |
sight | பார்வை, கண்பார்வை, பார்க்கும் திறம், காட்சி, காணப்படுவது, தோற்றம், காணப்படுதல், காணக்கூடியது, கண்காட்சிப்பொருள், காட்சிக்குரியது, காண்டக்கபொருள், காட்சி எல்லை, நுண்நோக்கு, அறிதிறம், கருத்து, மதிப்புணர்வு, (பே-வ) பெரிதளவு, (வினை.) காண், அருகில் சென்று பார், காணுமளவில் அருகாகு, விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு, துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை, துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய், வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து, தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு, சரியாக இலக்குவை. |