rough | கடுந்தரை, கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு, குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி, வாழ்வின் இன்னா இடர்க்கூறு, போக்கிரி, கீழ்மகன், இயன்முருட்டுநிலை, திருந்தாநிலை, திருந்தாநிலைப்பொருள், மூலநிலைப்பொருள், (பெயரடை) கரடுமுரடான, சொரசொரப்பான, அரம்போன்ற, உராய்வுடைய, வழவழப்பற்ற, ஏற்றத்தாழ்வான, மேடுபள்ளங்கள் நிறைந்த, பரும்படியான, நயமற்ற, திருந்தாத, ஒப்பனை செய்யப்படாத, மணிவகையில் பட்டையிடப்படாத,. மயிர்நீவப்பெறாத, மயிரடர்ந்த, பம்பையான, கோதிவிடப்பெறாத, கததரித்துவிடப்பெறாத, இழை வகையில் நெருடான, மெருகிடப்படாத, இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த, மென்மையற்ற, இளமைகடந்த, மெல்லியல்லாத, நெல்வகையில் உமிபோக்கப்பெறாத, செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத, அரைகுறையான, கருமூல நிலையிலுள்ள, இயல்நிலையான, திட்ப நுட்பமற்ற, ஏகதேசமாக ஏற்கத்தக்க, தோராயமான, தேர்ச்சியற்ற, தாடக்கப்படி நிலையிலுள்ள, அமையற்ற, புயலால், அலைக்கப்பட்ட, கொந்தளிப்பான, கட்டுக்கட்ங்காத, கலகநிலையிலுள்ள, ஒழுங்கமைவற்ற, தயவற்ற, கண்ணோட்ட மில்லாம, அன்பாதரவில்லாத, கடுமை வாய்ந்த, உணர்ச்சியற்ற, கொடுமையான, வன்முறையான, கடுமைமிக்க, உறு கண்டிப்பான, கடுகடுப்பு வாய்ந்த, சுவை வயல் கடுப்புடைய, நடத்தை வகையில் மென்மையற்ற, பேச்சு வகையில் ப்ண்பற்ற, பண்பாடில்லாத, நாகரிகமற்ற, கையாளுதல் வகையில் கருத்தற்ற, கவனிப்பற்ற, முரட்டுத்தனமான, வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த, துன்பநிறைந்த, அலைக்கழிவான, (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை, இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி, பரற்படிவின் எதிராகத் தடவு, உராய்வுசெய், குதிரையை அடக்கு, குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு, பருநிலையில்ட திட்டஞ் செய், அரைகுறையாகப் பட்டையிடு, முதல்நிலை உருவரையிடு, கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு, கரடு முரடாக்கு, கடுமையாக நடத்து, (வினையடை) கரடுமுரடாக, முரட்டுத்தனமாக, அரைகுறையாக. |
tough | போக்கிரி, தெருச்சுற்றி வீணன், (பெயடை) கெட்டிப்பான, உரப்பான, நெகிழ்வும் விறைப்பும் வாய்ந்த, கட்டுறுதியான, ஒடிக்க முடியாத, வெட்ட முடியாத, கட்டுவிடாத, களிமண் வகையில் விடாது ஒட்டிக்கொள்கிற, கட்டுறைப்புள்ள இன்னல் பொறுக்கவல்ல, கடுந் துணிவுள்ள, எதற்குமஞ்சாத, கடுமுனைப்பான, திண்ணிய வலிமையுள்ள, உரம் வாய்ந்த, விட்டுக்கொடுக்காத, பிடிவாதமுடைய, கடுமைவாய்ந்த, சிக்கல் வகையில் விடுவிக்க முடியாத, ஊழ் வாய்ப்பு வகையில் கொடிய, துன்பம் விளைக்கிற, கடுமையான, செயற்கடுமையான, மகிழ்ச்சிதாராத, முரடான, கீழ்ப்படியாத, மிகு கலகம் விளைகிற, தொடர்ந்து குற்றஞ் செய்யும் பாங்குள்ள. |