Word | Tamil Definition |
---|
universal | (மெய்.) அகல் பொதுவிரி, இயல்பாகப் பல பொருள்களுக்கும உரித்தாகக் கொள்ளத்தக்க பொது மூல அடிப்படைக்கருத்துப்படிவம், (அள.) முழுவிரி வாசகம், கருத்து முழுவதன் பயன்மானத்தையும் விடாது சுட்டும் முழுநிறைகூற்று வாசகம், (பெ.) இயற்கை முழுதளாவிய, இயல் உலகளாவிய, முழு மொத்த விரிவுடைய, உலக முழுதளாவிய, இன முழுதளாவிய, முழுநிறை பொருளகற்சிவாய்ந்த, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் உள்ள, உலக முழுதேற்புடைய, எங்கும் நடைபெறுகிற, எல்லாராலும் செய்யப்படுகிற, எல்லாக் காலத்திற்கும் உரிய, எல்லாவற்றிற்கும் பொருந்துகிற. |
universalist | மா மன்னுய்தியர், மனித இனம் முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கோட்பாடுடைய கிறித்தவ சமயப்பிரிவின் உறுப்பினர். |
universalism | மா மன்னுய்திக் கோட்பாடு, மனித இன முழுமைக்கும் மீட்புக் கிடைக்கும் என்ற கிறித்தவ சமயப் பிரிவினரின் கோட்பாடு. |
universality | வரைவின்மை அகண்ட தன்மை, முழுநிறைவகற்சி, எங்குமுண்மை, நிலை மெய்ம்மை, என்றுமாறுமெய்ம்மை, (கண.) பொருள் முழுதகற்சிச் சுட்டு. |
universalize | முழுதகல் விரிவுபடுத்து, பன்முக அகற்சிப்படுத்து, இயலுலகளாவுவி, உலகளாவுவி, இனமளாவுவி, முழுநிலை நிலவரப் பண்பாக்கு, (அள.) இனச்சுட்டு முழுதளாவுவி, பொருள்சுட்டு முழுவிரிவளாவுவி. |