Word | Tamil Definition |
---|
war | போர், யுத்தம், நாடுகளிடையே பகைமைத் தாக்கு, எதிர்த்தாக்கு நடவடிக்கைகளின் தொகுதி, நீடித்த பகைமை, போராட்டம், (வினை.) (பழ.) போர்புரி யுத்தம் செய், போரிட்டு அடக்கு, போட்டியிடு, பூசலிடு. |
ward | இளங்கணர், முதுகணாளரின் பாதுகாப்பில் இருப்பவர், முதுகண்மை, முதுகணாளர் மேற்பார்வை, நகர்வட்டம், நகரின் உட்பிரிவு, கூடம், சிறை-மருத்துவமனை-ஏலார் விடுதி ஆகியவற்றின் பிரிவு, மருத்துவமனைப் படுக்கைத்தொகுதி, காவல் பாதுகாப்புக் கவனிப்பு, காப்பாரண் மாளிகைக் காவற்கூடம், (பழ.) வாட்போரில் தடுப்பு முறை, (அரு.) முதுகணாளர் பாதுகாப்பு, (அரு.) சிறைகாப்பு, சிறைகாவலீடு, (வினை.) வாட்போரில் தடுப்பு முறை கையாளு, எதிர்த்துத் தாக்கிக் தடு, தடுத்துக் காப்பாற்று, கடவுள் வகையில் தடுத்தாளு, காத்தமை, தடுப்புக்காப்புநிலையில் போரிடு, பாதுகாப்புப் போரிடு, கூடத்தில் வை, கூடத்தில் அமர்வி. |
ware | செய்கலம், விற்பனைக்காகச் செய்யப்படும் பொருள்கள், மட்கல வகை, செய்தாக்கப்பட்ட விற்பனைப் பொருள்கள். |
warm | வெதுவெதுப்பானது, படைத்துறை மேற்சட்டை, குளிர் காய்வு, குளிர் காய்வுதவி, குளிர்காய்விப்பு, மூட்டம், குளிர்காய்வமைவு, வெப்பூட்டமைவு, (பெ.) மிகு வெப்பான, மிகு உடல் வெப்பநிலையுடைய, உடல்வெப்பநிலை மிகுதியாய்விடப்பெற்ற, ஆடைவகையில் உடடைலக் கதகதப்பாக வைத்திருக்கிற உதவுகிற, மனமார்ந்த, மனமுவந்த, சிரத்தையுள்ள, ஆவலுள்ள, ஆர்வமிக்க, கிளர்ச்சியுடைய, விறுவிறுப்பான, எழுச்சிமிக்க, கிளர்ச்சிமிக்க, சினமுடைய, தீவிரமான, மனவெழுச்சி கொண்ட, இடரார்ந்த, நிலைபெறச் செய்யமுடியதபடி இடர்ப்பாடான, உணர்ச்சி வகையில் இரக்கமுள்ள, உணர்ச்சி வசப்படுகிற, அன்புமிக்க, எளிதில் பதியத்தக்க, ஏற்குந்தன்மையுள்ள,வண்ண வகையில் வெப்பத்தைத் தோற்றுவிக்கிற சிவப்பு-மஞ்சள் நிறமுடைய, மோப்ப வாடை வகையில் புதிதாகவும் கடுமையாகவும் உள்ள, குழந்தைகள் மறைந்து பிடிக்கும் விளையாட்டில் மறைவிடத்திற்கு மிக அருகில் உள்ள, கண்டுபிடிக்கும் தறுவாயிலுள்ள, நல்ல நிலையிலுள்ள, செல்வமிக்க, வளவாய்ப்பு நிறைந்த, (வினை.) சூடுபடுத்து, சுடவை, குளிர்காயவை, ஆடையை உலர வை, நன்றாக அடித்து நொறுக்கு, ஆவல்கொள், ஆர்வங்கொள், எழுச்சிகொள், சுறுசுறுப்பாடை, பரபரப்புக்கொள், ஒத்துணர்வுகொள். |
wart | பாலுண்ணி, கழலை, உடம்பில் உண்டாகும் புறச்சதை வளர்ச்சி, கரணை, செடித்தண்டில் தோன்றும் புடைப்பு. |