மரபுச் சொற்கள்

மரபுச்சொற்களின் திரட்டு

மரபுச் சொற்கள்

தலை எடுத்தல்
வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருதல்
தலை குனிதல்
அவமானம் அடைதல்
தட்டிக் கழித்தல்
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
செவி சாய்த்தல்
உடன்படுதல்
இணங்குதல்
இசைதல்
கையும் களவுமாய்
குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
கை கூடுதல்
ஒரு காரியம்/ செயல் நிறைவேறுதல்
கை கழுவுதல்
உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்
குரங்குப் பிடி
பிடிவாதம்/பற்றிக்கொண்டதைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மை
கிணற்றுத் தவளை
தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது எதையும் அறியாதவன்
காது குத்துதல்
சாமார்த்தியமாகப் பொய் சொல்லுதல்
கரைத்துக் குடித்தல்
ஒரு கவலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க படித்து அறிதல்
கரி பூசுதல்
அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல்
கண்ணும் கருத்தும்
முழுக் கவனத்துடன்
கடுக்காய் கொடுத்தல்
ஏமாற்றி தப்புதல்
ஒற்றைக் காலில் நிற்றல்
விடாப்பிடியாக நிற்றல்/பிடிவாதமாக இருத்தல்
ஒரு கை பார்த்தல்
மோதிப்பார்த்தல்
எதிர்கொள்ளுதல்
எடுப்பார் கைப்பிள்ளை
சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர்
ஆறப் போடுதல்
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்தி செய்தல்
அள்ளி விடுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அள்ளி இறைத்தல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
அவசரக் குடுக்கை
ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து செய்துவிடுபவன்
கம்பி நீட்டுதல்
பிறரின் கவனத்திலிருந்து நழுவுதல்
கங்கணம் கட்டுதல்
ஒரு செயலைச் செய்து முடிக்க உறுதி எடுத்துக்
கொள்ளுதல்
ஏட்டுச்சுரைக்காய்
அனுபவமில்லாத நூல் படிப்பு
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
கிள்ளுக்கீரை
அற்பமான ஒன்று.
மிகச்சுலபமாகச் சமாளித்து விடலாம் என்ற
நினைப்பு
ஓட்டை வாய்
எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன்.
எல்லாவற்றையும் எல்லாரிடமும் எளிதாகச் சொல்லிவிடுகின்ற இயல்பு
ஆழம் பார்த்தல்
ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்
கை கொடுத்தல்
தக்க நேரத்தில் உதவி செய்தல்
அரக்கப் பரக்க
அவசரம் அவசரமாக
அவசரமும் பதற்றமும்