தமிழில் செம்மையை மேன்மை செய்வோம்!!!

| | | | | | | | | | |
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன்
ஶ் | ஜ் | ஷ் | ஸ் | ஹ் | க்ஷ்
ஶ்ரீ

கிரந்தம் விரும்பேல்

கிரந்தம் என்றால் என்ன?
வடமொழி(சமஸ்கிருத) சொற்களை தமிழ்மொழியில் எழுத உருவாக்கப்பட்ட எழுத்து முறையாகும். கிரந்த மெய் எழுத்துக்கள் ஶ், ஜ், ஷ், ஸ், ஹ், க்ஷ், ஶ்ரீ.

மணிப்பிரவாளம் அல்லது மணிப்பிரவாள நடை என்றால் என்ன?
தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இம்முறை தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது.

கிரந்த சொற்கள் தமிழோடு இருப்பதனால் நமக்கு என்ன பிரச்சனை?
என்று கேட்டால் ஒன்றும் இல்லை ஆனால் இதே நிலை நீடிக்குமாயின் தமிழ்மொழி பல சொற்களை கடன்வாங்கிய கடனாளியாக ஆகிவிடும். தாயின் பெயரால் மகன் கடன்வாங்குவது தப்பாக தெரிந்தால் இன்நிலை தொடராது. நமது முன்னோர்கள் சிலர் வாங்கிய கடனை நாம் அடைப்போம். நாமும் கடன் கொடுத்துள்ளோம் என்பதனையும் மறக்க கூடாது.

எடுத்துக்காட்டாக ஒரு சொல்

“சேஷ்டை” என்பது ஒரு வடசொல் இதற்கு இணையான தமிழ் சொல் “குறும்பு” இவற்றை நாம் தூய தமிழ் சொற்கள் என்று அழைக்கலாம்.